வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா


வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா
x

ஜோலார்பேட்டை அருகே வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம். வட்டத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு ராமர், சீதாதேவி, லட்சுமணர், அனுமார் மற்றும் மூலவர் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 6.30 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு ராமர், சீதாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வீர ஆஞ்சநேயர் சுவாமி அறக்கட்டளை நிர்வாகி எக்ஸெல் ஜி.குமரேசன், கோவை அன்பு மற்றும் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story