யோக ஆஞ்சநேயர் மலைக் கோவிலில் ராமநவமி உற்சவம்
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் மலைக் கோவிலில் ராமநவமி உற்சவம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
சோளிங்கர் கொண்டபாளையத்தில் யோக ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சீதா, லட்சுமணன் சமேத கோதண்டராமர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் நடைபெற்றது. இதையோட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் உற்சவர் சீதா, லட்சுமணன் சமேத கோதண்டராமர் மற்றும் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி கேடயங்களில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ஜெயா செய்திருந்தார்.
Related Tags :
Next Story