கருட வாகனத்தில் ராமர்-சீதை உற்சவம்


கருட வாகனத்தில் ராமர்-சீதை உற்சவம்
x

படவேடு கோவிலில் ஆடித்திருவிழாவின் 7-ம் வெள்ளி விழாவில் கருட வாகனத்தில் ராமர்-சீதை உற்சவம் நடந்தது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

படவேடு கோவிலில் ஆடித்திருவிழாவின் 7-ம் வெள்ளி விழாவில்

கருட வாகனத்தில் ராமர்-சீதை உற்சவம் நடந்தது.

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடித்திருவிழாவின் 7-ம் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ராமச்சந்திர மூர்த்தி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரமும் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் கருடவாகனத்தில் ராமர், சீதை உற்சவம் நடைபெற்றது. மேலும் வைகுண்ட ஏகாதசி மகிமை என்ற பொம்மலாட்டம் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.


Next Story