ரம்ஜான் சிறப்பு தொழுகை


ரம்ஜான் சிறப்பு தொழுகை
x

ராஜபாளையம், அருப்புக்கோட்டையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம், அருப்புக்கோட்டையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. சம்மந்தபுரத்தில் இருந்து இஸ்லாமிய கொடியை ஏந்தியவாறு, இஸ்லாமியர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.

இந்த ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் நகர் வழியாக வந்து முடங்கியாறு சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நிறைவடைந்தது. மைதானத்தின் வாசலில் இருந்த கம்பத்தில் கொடியை ஏற்றிய பின்னர் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள், தொழுகை முடிந்தவுடன் ஒருவொருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

அருப்புக்கோட்டை

அதேபோல அருப்புக்கோட்டை காட்டுபாவா தெற்கு தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த தொழுகையில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். இதேபோல் சின்ன பள்ளி வாசல், பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


Next Story