ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா


ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவானது கடந்த 27-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. 2-வது நாளான நேற்று முன்தினம் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் விபீஷ்ணர் பட்டாபிஷேக திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் கடைசி நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ராமலிங்கப்பிரதிஷ்டை ேகாவில் உள்ளே நடைபெற்றது.அதற்காக பகல் 12.30 மணியளவில் ஆஞ்சநேயர் வேடம் அணிந்த கோவில் குருக்கள் ஒருவர் சாமி விக்ரகத்தை தோளில் வைத்து சுமந்தபடி முதல் பிரகாரத்தில் ஆடி வலம் வந்தார். தொடர்ந்து கருவறையில் சென்று அந்த சாமி விக்ரகத்தை கருவறை உள்ளே கொண்டு சென்று வைத்தார். பின்னர் விஸ்வநாதர் மற்றும் சுவாமி அம்பாளுக்கும் சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. இந்த ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி- அம்பாள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.


Related Tags :
Next Story