பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ராமலிங்கம் எம்.பி. ஆய்வு


பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ராமலிங்கம் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்னாம்பட்டினம் பகுதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ராமலிங்கம் எம்.பி. ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி வழியாக நாட்டு கன்னி மன்னி ஆறு மற்றும் முல்லை ஆறு ஆகியவை சென்று கீழமூவர்கரை பகுதியில் கடலில் கலக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேற்கண்ட 2 ஆறுகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் கோனையாம்பட்டினம், தென்னாம்பட்டினம், கீழமூவகரை, மாத்தாம்பட்டினம் ஆகிய இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு வெள்ள நீர் 800 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில் புகுந்தது. தகவல் அறிந்த ராமலிங்கம் எம்.பி. மற்றும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று மேற்கண்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story