ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு
ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணித்தேர்வு வருகிற 30-ந்தேதி காலை 8 மணிக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 1.9.2009 அன்றோ, அதற்கு பின்னரோ பிறந்தவர்கள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேர்விலும், 1.9.2007 அன்றோ, அதற்கு பின்னரோ பிறந்தவர்கள் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான தேர்விலும் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் விளையாட்டு உபகரணங்கள், ஆதார் மற்றும் வயது சான்றிதழுடன் வரவேண்டும். மேலும் விவரங்களை 9789515435 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீசுவரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story