ராவணனை சம்ஹாரம் செய்த ராமபிரான்


ராவணனை சம்ஹாரம் செய்த ராமபிரான்
x

ராமேசுவரம் கோவிலில் தல வரலாற்றை விளக்கும் வகையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக ராவண சம்ஹாரம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் தல வரலாற்றை விளக்கும் வகையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக ராவண சம்ஹாரம் நடைபெற்றது.

ராமேசுவரம் கோவில்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று முதல் தொடங்கியது. திருவிழா நாளை வரை நடைபெறுகின்றது.

இதனிடையே திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை ராவண சம்ஹாரத்திற்காக கோவிலில் இருந்து ராமபிரான், சீதா தேவி, ஆஞ்சநேயருடன் தங்ககேடயத்தில் திட்டக்குடி சந்திப்பு பகுதிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 10 தலை கொண்ட ராவணன் ராமபிரானை 3 முறை சுற்றி வந்த பின்னர் ராமபிரான் 10 தலை கொண்ட ராவணனை வதம் செய்தார். ராவணனை வதம் செய்த வேலுக்கு பாலாபிஷேகம் செய்து, புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை பூஜைகள் நடந்தன. ராவண சம்ஹாரம் நிகழ்ச்சியில் கோவிலின் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பட்டாபிஷேகம்

திருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக இன்று(புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வைத்து இலங்கை மன்னராக விபீஷணரை ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.திருவிழாவின் மூன்றாவது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு கோவிலின் உள்ளே வைத்து ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது.


Related Tags :
Next Story