ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்


ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை(சனிக்கிழமை) ராமேசுவரம் கோவிலில் பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை(சனிக்கிழமை) ராமேசுவரம் கோவிலில் பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.

மகா சிவராத்திரி திருவிழா

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் 7-ம் நாள் விழா இன்று நடக்கிறது.

பகல், இரவு நடை திறந்திருக்கும்

திருவிழாவின் 8-வது நாளான நாளை(சனிக்கிழமை) மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும். மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதுபோல் நாளை மறுநாள் 19-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது.

திருவிழாவின் 9-வது நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இதே போல் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர்கோவில், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருவாடானை ஆதிரெத்திேனசுவரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது.


Related Tags :
Next Story