மழை மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா


மழை மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா
x

மழை மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா

நாகப்பட்டினம்

வேதாரண்யம் தாலுகா தென்னம்புலத்தில் உள்ள மழை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடக்கிறது. நேற்றுமுன்தினம் தென்னம்புலம் கருப்பங்காடு பகுதி சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து புலி வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கருப்பங்காடு கிராம மக்கள் செய்திருந்தனர்.

அதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமிர்தகர சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி மண்டகபடியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு முருகப்பெருமான் யானை வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story