கோவில்களில் ராமநவமி சிறப்பு வழிபாடு


கோவில்களில் ராமநவமி சிறப்பு வழிபாடு
x

கோவில்களில் ராமநவமி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

கோவில்களில் ராமநவமி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநவமி

ராமநவமியை முன்னிட்டு நெல்லையில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லை அருகே உள்ள அருகன்குளம் காட்டுராமர் கோவிலில் அதிகாலையில் கும்ப பூஜையும், தொடர்ந்து ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.

மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள்

இதேபோல் பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், வண்ணார்பேட்டை இஸ்கான் கோவில், பாளையங்கோட்டை ராமசாமி கோவில், நெல்லை வரதராஜ பெருமாள் கோவில், சன்னியாசி கிராமத்தில் உள்ள நெல்லை திருப்பதி, சுத்தமல்லி விலக்கு ஜெய்மாருதிஞான தர்மபீடம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

களக்காடு

களக்காடு சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோவிலில் ராமநவமி விழா கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் வீதி பஜனை, திவ்ய நாம பஜனை, இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 9-ம் நாளான நேற்று ராமநவமி விழா நடந்தது. இதையொட்டி சந்தான கோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்களின் வீதி பஜனை ஊர்வலம், உபன்யாசம், திவ்ய நாம பஜனை, கர்நாடக இசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story