ஆம்பூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை


ஆம்பூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
x

ஆம்பூரில் 3 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

திருப்பத்தூர்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஆம்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆம்பூர் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு சொற்பொழிவும், தொழுகையும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். 3 இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகையில் ஆம்பூர் ஷபீக் ஷமீல் குழும தலைவர் என்.முஹம்மத் சயீத், மேலாண்மை இயக்குனர் என்.ஷபீக் அஹமத், பரிதா குழும தலைவர் மெக்கா ரபீக் அஹமத், மொஹிப் ஷூ தொழில் குழும தலைவர் கோட்டை முஹம்மத் மொஹிபுல்லா, மேலாளர் முனவர், பரிதா குழும மேலாளர்கள் முஹம்மத் அர்ஷத், ஜூபேர் அஹமத், தோல் தொழிற்சாலை மேலாளர்கள் பிர்தோஸ் கே.அஹமத், யு. தமீம் அஹமத், டாப் ரப்பர் ஷமிம்அஹமத், ஆம்பூர் நகரமன்ற தலைவர் பி.ஏஜாஸ்அஹமத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய துணை செயலாளர் ஹெச். அப்துல் பாசித், வர்த்தக சங்க துணைத்தலைவர் ஹபிபூர் ரஹ்மான், டாக்டர் சையத்முக்தார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஈத்கா மைதானத்திற்கு சென்று தொழுகை முடித்து விட்டு வந்தவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story