ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்


ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்
x

வந்தவாசியில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதமும், ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் பங்குனி மாதமும் நடைபெறும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 2 கோவில்களின் மரத்தேர்களும் சேதமடைந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை.

இதையடுத்து தமிழக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.60 லட்சம் நிதியுடன், பொதுமக்கள் பங்களிப்பையும் சேர்த்து 2 புதிய தேர்களை செய்யும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இந்த நிலையில் ரங்கநாத பெருமாள் கோவிலுக்கான புதிய தேர் செய்யும் பணி நிறைவடைந்ததையடுத்து, தேரின் வெள்ளோட்டம் கடந்த 27-ந் தேதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது.

விழாவின் 7-ம் நாளான இன்று 15 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த புதிய மரத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரில் ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் பவனி வந்தார்.

கோவில் அருகிலிருந்து புறப்பட்ட தேர் காந்தி சாலை, பஜார் வீதி, கே.ஆர்.கே. தெரு, சன்னதி தெரு ஆகிய மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலைஅடைந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story