சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; 3 சிறுவர்கள் கைது


சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; 3 சிறுவர்கள் கைது
x

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் 17 மற்றும் 16 வயது சிறுமிகள். இவர்கள் இருவரும் தோழிகள் ஆவர். இதில் 17 வயது சிறுமி நர்சிங்கும், 16 வயது சிறுமி 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் 16, 18, 19 வயதுடைய 3 பேர் நட்பாக பழகியுள்ளனர். இந்நிலையில் இந்த சிறுவர்கள் 3 பேரும் 2 சிறுமிகளையும் காரைக்குடியை சுற்றி பார்க்க வருமாறு கூறி அழைத்தனர். பின்னர் காரில் அவர்களை அழைத்து சென்று 2 சிறுமிகளையும் அந்த சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் அவர்கள் சுற்றி திரிந்ததை பார்த்த ரோந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிகள் தரப்பில் தெரிவித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்தனர்.



Next Story