தர்மபுரியில் காதலிப்பதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்-வாலிபர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரி:
தர்மபுரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்தநிலையில் மாணவி மீண்டும் வீட்டிற்கு சென்றார். அவரிடம் எங்கே சென்றாய்? என்று பெற்றோர் விசாரித்தனர். அப்போது லோகேஷ் (வயது 23) என்ற வாலிபர் சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி இருப்பது தெரியவந்தது. சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த தன்னை லோகேஷ் ஆசை வார்த்தை கூறி, ஏரிக்கரைக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது பற்றி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்ட பிரிவின் கீழ் போலீசார் லோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.