வீடு புகுந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபர் மீது போலீசில் புகார்
வீடு புகுந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது
மதுரையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த பிரசாத்(25) என்பவர் என்னுடைய வீட்டுக்குள் புகுந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இங்கு நடந்ததை வெளியில் கூறினால், கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டினார். இதற்கிடையே பிரசாத் எனக்கு வீடியோ மற்றும் போட்டோக்களை அனுப்பி வைத்தார். அதில் நானும் அவரும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது வேறு யாரையாவது திருமணம் செய்தால் இந்த போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டினார். இந்தநிலையில், எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனை அறிந்த பிரசாத் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.