வனத்துறையினரின் கண்களில் சிக்கிய அரிய விலங்குகள்


வனத்துறையினரின் கண்களில் சிக்கிய அரிய விலங்குகள்
x

கணக்கெடுப்புக்கு சென்ற வனத்துறையினர் கண்களில் அரிய விலங்குகள் சிக்கின.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த பணியில் 40 குழுவினராக 120 பேர் ஈடுபட்டுள்ளனர். லேசர் கருவிகள், ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோட்டை மலையான் பீட் அருகே வனத்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட போது திடீரென காட்டு எருமை அவர்களை வழிமறித்தது. உடனே அவர்கள் மாற்றுப்பாைதயில் சென்று தொடர்ந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுப்பின்போது பச்சோந்தி, சிறுத்தைகளின் எச்சம், புலிகளின் கால் தடமும் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானைகளையும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story