வீட்டில் புகுந்த மரநாய் பிடிபட்டது


வீட்டில் புகுந்த மரநாய் பிடிபட்டது
x

தஞ்சையில் வீட்டில் புகுந்த மரநாய் பிடிபட்டது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மானம்புச்சாவடி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் பிரபுராம். இவரது வீட்டில் அடையாளம் தெரியாத உயிரினம் காணப்படுவதாக வனத் துறைக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சை வனச்சரகர் ரஞ்சித் ஆலோசனையின் பேரில் அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைசேர்ந்த சதீஷ்குமார், ரேவந்த், வினோத் ஆகியோர் பிரபுராம் வீட்டுக்கு சென்று மர நாயை மீட்டனர்.அழிவின் விளிம்பில் உள்ள உயிரின பட்டியலில் உள்ள இந்த மர நாய் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக உள்ளது. நகரப் பகுதியில் அரிதாக தென்படும் இந்த மர நாய் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, நேற்றுமாலை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி முன்னிலையில் தஞ்சை அருகே உள்ள காட்டில் விடப்பட்டது.


Next Story