Normal
ராசிபுரத்தில் அதிகபட்சமாக 94 மி.மீட்டர் மழைபதிவு
ராசிபுரத்தில் அதிகபட்சமாக 94 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ராசிபுரம் பகுதியில் 94 மி.மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ராசிபுரம்-94, திருச்செங்கோடு-44, குமாரபாளையம்-27, சேந்தமங்கலம்-13, புதுச்சத்திரம்-2. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 180 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் ராசிபுரம், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story