அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ரேஷன்கார்டு ஒப்படைப்பு போராட்டம்


அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ரேஷன்கார்டு ஒப்படைப்பு போராட்டம்
x

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ரேஷன்கார்டு ஒப்படைப்பு போராட்டம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி 45-வது வார்டு காரூண்ய நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றகோரி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தமிழ் புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா தலைமையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன்கார்டு ஒப்படைப்பு - ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் காரூண்ய நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. மேலும் பொங்கல் தொகுப்பு மற்றும் பணத்தை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story