பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம்


பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:45 AM IST (Updated: 12 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் தாலுகா அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கீழ்வேளூர் அருகே உள்ள இருக்கை ஊராட்சியில் பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு கீழ்வேளூர் வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார். முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், ரேஷன் கார்டில் செல்போன் எண் மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு வகை மாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 20 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் ஊராட்சி தலைவர் முருகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் பீர்முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story