தளியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்


தளியில் இருந்து கர்நாடகாவுக்கு  சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
x

தளியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி போலீசார் செம்பட்டி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் சரக்கு வாகனத்தில் சோதனை செய்தபோது மூட்டைகளில் 2½ டன் ரேஷன் அரிசி பெங்களூருக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story