வேனில் கடத்த முயன்ற 80 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


வேனில் கடத்த முயன்ற 80 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x

தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 80 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 80 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ரேஷன் அரிசி கடத்தல்

தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்- இன்ஸ்பெக்டர்கள் முரளி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, செந்தில்குமார், ராமச்சந்திரன், வேணுகோபால், குமார் மற்றும் போலீசார் காரிமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.

இதில் 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் சோகத்தூரை சேர்ந்த செல்வம் (வயது 29) என்பதும், சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

டிரைவர் கைது

மேலும் இவர் 60 மூட்டை ரேஷன் அரிசியை பெங்களூருக்கு கடத்துவதற்காக காரிமங்கலம் அருகே பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 80 மூட்டைகளில் இருந்த 4 டன் ரேஷன் அரிசி மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் செல்வத்தை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தர்மபுரி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story