தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்தி செல்லப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்தி செல்லப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
x

தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்தி செல்லப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

ஈரோடு

தாளவாடி

தாளவாடியை அடுத்த தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள ஓங்கன்புரம் பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷ், தனி வருவாய் ஆய்வாளர் சு.தர்மராஜன் மற்றும் அதிகாரிகள் ேராந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மூட்டைகளுடன் ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது மூட்டைகளில் 150 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் தாளவாடியை சேர்ந்த ராஜேந்திரபிரசாத் (வயது 32) என்பதும், தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் ஸ்கூட்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாளவாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.தாளவாடி

Next Story