ரேஷன் அரிசி பறிமுதல்
சங்ககிரி ரெயில் நிலையத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்
சங்ககிரி
சங்ககிரி ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொது வினியோக திட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது பிளாட்பாரத்தில் கிடந்த 10 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சங்ககிரி நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story