ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய  2 பேர் கைது
x
சேலம்

சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வேடுகாத்தாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 30 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திய வேடுகாத்தம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 31), சிவதாபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story