புதரில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி


புதரில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதரில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா, பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஊட்டி ஆர்.கே.புரம் சாலையில் உள்ள புதரில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி கொட்டப்பட்டு கிடந்தது. ஆங்காங்கே குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி தலைமையில் வழங்கல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். கடத்தி செல்லும்போது அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க கொட்டப்பட்டதா என்று விசாரித்தனர். இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி கூறுகையில், ஆய்வு மேற்கொண்டதில் 100 கிலோ ரேஷன் அரிசி கொட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story