ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி
சுரண்டை:
நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று தென்காசி மாவட்டம் சுரண்டை- சங்கரன்கோவில் ரோட்டில் சேர்ந்தமரம் பழைய போலீஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக 3,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மினிலாரியை ஓட்டி வந்த ஆலங்குளத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மினி லாரி மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story