ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

கடையம்:

நெல்லை மாவட்டம் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் கடையம் அருகே ஆம்பூர் சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்பையில் இருந்து வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 8 சாக்குப்பைகளில் 50 கிலோ வீதம் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை பகுதியை சேர்ந்த வர்கீஸ் மகன் இன்பராஜ் (வயது 20) என்பவரை கைது செய்து, அரிசியையும் பறிமுதல் செய்தனர்.


Next Story