ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 297 நாட்கள் காவல்


ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 297 நாட்கள் காவல்
x

ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 297 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மண்டல உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவுபடி, போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் கடந்த 27-ந் தேதி ரேஷன் அரிசி கடத்தியதாக திருச்சி காட்டூரை சேர்ந்த இஸ்மாயில் (வயது 43) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இஸ்மாயிலுக்கு ஏற்கனவே திருச்சி வருவாய் கோட்டாட்சியரிடம் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு இருந்தது. அதில் நன்னடத்தையை பேணுவதாகவும் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அதை மீறி பிணைய காலமான ஒரு வருடம் முடிவதற்குள் அவர் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் அவரது நன்னடத்தை காலத்தில் மீதமுள்ள 297 நாட்கள் சிறை காவலில் வைக்க வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்மாயிலிடம் வழங்கப்பட்டது.


Next Story