அணையில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டதால் பரபரப்பு


அணையில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அணையில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊட்டி அடுத்த எமரால்டு அணைப்பகுதியில் இருந்து எமரால்டு வேலி செல்லும் பகுதியில் உள்ள அண்ணாநகர் சுருக்கி பாலம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் தண்ணீரில் கொட்டப்பட்டு கிடந்தது. மேலும் அணையில் 25 கிலோ எடை கொண்ட சுமார் 100 ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் குந்தா தாசில்தார் இந்திரா மற்றும் எமரால்டு போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.இதுகுறித்து வழங்கல் துறையினர் கூறும்போது, அணையில் இருந்து மீட்கப்பட்டது ரேஷன் அரிசி தானா என்று உறுதியாக தெரியவில்லை. இந்த அரிசி கொட்டப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேல் இருக்கலாம். அரிசி ஊறி போய் உள்ளது. மேலும் தமிழகத்தில் சணல் பைகள் மூலம் தான் ரேஷன் அரிசி வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த அரிசி மூட்டைகள் உரத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் கட்டிக் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு உள்ளது. இருப்பினும், அரிசி மாதிரிகள் குன்னூரில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story