புதிய ரேஷன் கடை திறப்பு


புதிய ரேஷன் கடை திறப்பு
x

நல்லகானகொத்தப்பள்ளியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி ஒன்றியம் கோனேரிப்பள்ளி ஊராட்சி நல்லகான கொத்தப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால் இங்கு ரேஷன் கடை இல்லாததால் பொதுமக்கள் குருபராத்பள்ளிக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தனர். இதையடுத்து ஊராட்சி தலைவர் கோபம்மா சக்கார்லப்பாவின் சொந்த செலவில் ரூ.7 லட்சம் மதிப்பில் நல்லகானகொத்தப்பள்ளியில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இதை சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இதில், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமம்மா தியாகராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புஷ்பராஜ், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் விஜி, விற்பனையாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story