ரேஷன் கடை பணியாளர்கள் சங்க கூட்டம்
ரேஷன் கடை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் விஜயபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க. சார்பில் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ரேஷன் கடைகளுக்கு தனித்துறையை முதல்-அமைச்சர் ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு பொதுநிலை திறன் காமன்கேடர் கொண்டு வர வேண்டும். புதிய ரேஷன் கடை பணியாளர்களை நியமனம் செய்வதற்கு முன் தொலைதூரத்தில் பணிபுரியும் விற்பனையாளர், வெளி பணியாளர்கள் வெளிமாவட்டத்திற்கு மாறுதல் கோரினால், அவர்கள் விரும்பும் பட்சத்தில் அருகில் உள்ள பகுதிக்கு நிபந்தனை இன்றி நிரந்த பணி இடமாறுதல் உறுதி செய்யப்பட வேண்டும். தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்குரிய அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.