ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன்கடைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுனர்கள் பணிக்கு நேரடி நியனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.vnrdrb.net என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 14-ந்்தேதி மாலை 5.45 மணியாகும். எனவே விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகளை தவிர்க்க முன்னரே இணையதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story