ரேஷன்கடை பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்


ரேஷன்கடை பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்
x

ரேஷன்கடை பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி உஷா (வயது54). இவர் பிரம்மபுரம் ரேஷன்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த போது வலியவிளைவீட்டை சேர்ந்த முத்துகுமார் (35) அரிசி வாங்க வந்தார். அப்போது அரிசி எடை குறைவாக இருப்பதாக கூறி உஷாவிடம் தகராறில் ஈடுபட்டு, கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உஷா கொடுத்த புகாரின் பேரில் முத்துகுமார் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story