ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.கோபிநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் வி.மோகன் முன்னிலை வகித்தார், மாவட்ட துணைத் தலைவர் ஜி.குணசேகர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் எஸ்.பக்தவச்சலம் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை மாநிலத் தலைவர் எம்.ஜெயச்சந்திரராஜா, மர்ம நபர்களால் கடலூரில் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எம்.முத்துக்குமார், போராட்ட குழு தலைவர் சபரிநாதன் உள்பட பலர் பேசினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்துரேஷன்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஷியாம் நன்றி கூறினார்.