2-வது நாளாக ரேஷன் கடைகள் அடைப்பு


2-வது நாளாக ரேஷன் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 9 Jun 2022 12:00 AM IST (Updated: 9 Jun 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

திருவாரூர்

திருவாரூர்:

கோரிக்கைகள்

பொதுவினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 17 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும்.கூடுதலாக வழங்க உள்ள சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை வழங்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2-வது நாளாக...

அதன்படி, நேற்று முன்தினம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ெதாடங்கினர். அதேபோல திருவாரூர் மாவட்டத்திலும், அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.2-வது நாளான நேற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டம்

மேலும், திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாகுல்அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் சரவணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

இதேபோல நீடாமங்கலம், ஒட்டக்குடி, கொரடாச்சேரி பகுதிகளில் உள்ள 15 ரேஷன்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.


Next Story