நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வண்ணமயமாக மாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வண்ணமயமாக மாற்றப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வண்ணமயமாக மாற்றப்பட்டு வருவதாக, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுவினியோக திட்டத்தில் தரமான சேவை, ரேஷன் கடைகள் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கவும், பொதுமக்களுடன் நல்லுறவை உறுதி செய்யும் அறிவுறுத்தி உள்ளது. இற்காக நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை என்ற திட்டத்தையும் அறிவித்து ள்ளது. அதன்படி உள்ளுர் மக்களின் ஒத்துழைப்பு ற்றும் ஒருங்கிணைப்புடன், ரேஷன் கடைகளின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து, ரேஷன் கடைகளை சீரமைத்து, அழகிய வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் சேதம் அடைந்து காணப்பட்ட ரேஷன் கடைகள் வண்ணமயமாக மாறி வருகின்றன.
16 கடைகள்
இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக தூத்துக்குடி திரேஸ்புரம்-3, முனியசாமிபுரம், கூட்டாம்புளி, செய்துங்கநல்லூர்-1, நாட்டார்குளம், ஆலந்தலை, மாவடிபண்ணை, நாலுமாவடி-1, மெய்தலைவன்பட்டி, சண்முகசிகாமணிநகர், செட்டிக்குறிச்சி, குதிரைகுளம், கத்தாளம்பட்டி, பச்சையாபுரம், வேம்பார் சுப்பிரமணியபுரம், நாகம்பட்டி ஆகிய 16 ரேஷன் கடைகளின் கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு அழகிய வண்ணம் பூசப்பட்டு உள்ளன. இந்த பணிகள் மாவட்டம் முழுவதும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
மேலும் பொதுமக்கள் நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை திட்டத்தின் கீழ், தங்கள் வட்டாரத்தில் செயல்படும் ரேஷன் கடை கட்டிடம் சீரமைப்பு மற்றும் வண்ணம் பூசும் பணிக்கு தொடர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்து உள்ளார்.