பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடைகள் நாளை செயல்படும்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பணி நாளாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை,
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ஹர் சஹாய் மீனா, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பணி நாளாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஈடாக வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story