நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், துணைத்தலைவர் பிருத்விராஜ், நிர்வாகிகள் சங்கர், தமிழரசன், நெல்சன், சகாயஅமிர்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா மீது 2 வது முறையாக கொடூரமாக தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story