தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் பொறுப்பேற்பு


தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் பொறுப்பேற்பு
x

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனராக ரா.ரவிச்சந்திரன் சென்னையில் பொறுப்பேற்று கொண்டார்.

சென்னை

கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தைச் சேர்ந்த இவர், இந்திய வருவாய் பணியில் 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். மதிப்பீடு, விசாரணை, நிர்வாகம் மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் பல்வேறு பதவிகளில் நாடு முழுவதும் பணியாற்றியுள்ளார். வருமான வரித்துறையின் முதல் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு மற்றும் செபியின் ஒருங்கிணைந்த சந்தை கண்காணிப்பு அமைப்புகள் திட்டம் அமைப்பதில் முக்கியப்பங்கு வகித்தவர்.

பணமோசடி தடுப்புச்சட்டம், எல்லை தாண்டிய வரிவிதிப்பு, விஷன்-2020, பள்ளி செல்லும் குழந்தைகளிடையே நிதி அறிவு மற்றும் வருமான வரித்துறையின் முடிவுகள் கட்டமைப்பு ஆவணம் ஆகியவற்றின் கீழ் சட்டத்தை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களில் அவர் ஒரு பகுதியாக இருந்தவர். இவர் மதுரையில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுகலை வேளாண்மைப் பட்டமும் மற்றும் கப்பல் மேலாண்மையில் முதுகலை பட்டமும் பெற்றவர். இவருடைய மனைவி, கீதா, மும்பை வருமான வரித்துறையின் முதன்மை தலைமை கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story