மாற்றுத்திறனாளிக்கு மனு எழுதி கொடுத்த கோட்டாட்சியர்


மாற்றுத்திறனாளிக்கு மனு எழுதி கொடுத்த கோட்டாட்சியர்
x

வேதாரண்யத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கோட்டாட்சியர் மனு எழுதி கொடுத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கோட்டாட்சியர் மனு எழுதி கொடுத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறைகேட்பு முகாம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள குறைபாபாடுகள் தொடர்பாக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் அனைத்து ஊராட்சிகளிலும் வேலை அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கோட்டாட்சியரிடம் மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

மனு எழுதினார்

வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்ற கண்பார்வையில்லாத மாற்றுத்திறனாளி மனு எழுதாமல் முகாமிற்கு வந்துவிட்டார். இதையடுத்து அவரிடம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் குறைகளை கேட்டு அவருக்காக தானே மனு எழுதினார். பின்பு அவரிடம் மனுவை படித்து காண்பித்தார். மனுவில் அவர் தெரிவித்த, '4 மணி நேரம் மட்டும் வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நிர்வாக அனுமதி பெற்று நடைமுறைபடுத்துவதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார். மாற்றுத்திறனாளிக்காக தாமாக முன்வந்து மனு எழுதிய கோட்டாட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story