மீண்டும் பணி வழங்க வேண்டும்
டேன்டீ தோட்டங்களில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என தற்காலிக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு, நெல்லியாளம், பாண்டியார், சிங்கோனா மற்றும் நடுவட்டம், கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் அரசு தேயிலை தோட்டங்கள் உள்ளன. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த தோட்டங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டது. அதில் தொழிலாளர்கள் குடும்பத்தினருடம் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே டேன்டீயில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி தேயிலை தோட்டங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் டேன்டீயில் பணிபுரிந்த தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் கேரளாவுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையை போக்க தற்காலிக தொழிலாளர்களுக்கு மீண்டும் டேன்டீ தோட்டங்களில் பணி வழங்க வேண்டும்.
மேலும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.