வாசகர் வட்ட கூட்டம்


வாசகர் வட்ட கூட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாசகர் வட்ட கூட்டம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் போஜன் தலைமை தாங்கினார். நூலகர் சுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற உள்ள 55-வது தேசிய நூலக வார விழாவை சிறப்பாக கொண்டாடுவது, இதற்காக கோத்தகிரி சுற்று வட்டார பள்ளி மாணவர்களிடையே இலக்கியத்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தக கண்காட்சி நடத்துவது, பள்ளி மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தலைமை பண்பு பயிற்சி அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நூலக அலுவலர்கள் தாமரை, நிர்மலா உள்பட வாசகர் வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் முருகன் நன்றி கூறினார்.


Next Story