வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்


வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
x

மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைத்து வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ந.செல்வகுமார் கலந்துகொண்டு, கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டு, கல்வி, கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-கல்லூரி வாழ்க்கை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு படிக்கட்டுகளாகும். இந்த நேரத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைத்து வாசிப்பு பழக்கத்தையும், மென்பொருள் திறன்கள் மற்றும் தொழில் முனைவோர் திறன்களையும் வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தஞ்சாவூர் தேசிய உணவு தொழில் நுட்ப நிறுவன இயக்குனர் எம். லோகநாதன் பேசுகையில், மாணக்கர்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறினார். முன்னதாக கல்லூரி முதல்வர் நா.நர்மதா ஆண்டறிக்கை வாசித்தார், விடுதி காப்பாளர் ரங்கநாதன் விடுதி அறிக்கையை சமர்ப்பித்தார். முன்னதாக கல்லூரி மாணவர் மன்ற துணைத் தலைவர் மா.ராமச்சந்திரன் வரவேற்றார். முடிவில் மாணவர் ம.முகமது சுகைப் நன்றி கூறினார்.


Next Story