அரசு பள்ளியில் வாசிப்பு இயக்கம் தொடக்கம்
அரசு பள்ளியில் வாசிப்பு இயக்கம் தொடங்கியது.
கரூர்
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான வாசிப்பு இயக்க தொடக்க விழா நடைபெற்றது. இதனை பள்ளி தலைமையாசிர் சாகுல் அமீது தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் ஷகிலா பானு, சகாயவில்சன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், புத்தங்களை எப்படி வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும், பள்ளி நூலகத்தில் இருந்து புத்தங்களை மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று அவற்றை எவ்வாறு படித்து கொள்ள வேண்டும், மேலும் மாநில அளவில் எப்படி வெற்றி பெறுவது, வெளிநாடு செல்லும் வாய்ப்பை எப்படி பெறுவது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story