மாணவர்களுக்கு வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி


மாணவர்களுக்கு வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி
x

தோரணமலை முருகன் கோவிலில் மாணவர்களுக்கு வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு அதிகாலையில் கணபதி ஹோமம் மற்றும் விநாயகர், சப்த கன்னியர்கள் மற்றும் மலையடிவாரத்தில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளி அம்மன், முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மலை அடிவாரத்தில் மத்தளம் பாறையில் இயங்கி வரும் சோகோ டெக்னாலஜி நிறுவனம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு வாசிப்புத்திறன் பயிற்சி நடைபெற்றது‌. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.



Next Story