குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என உதவி கலெக்டர் ெதரிவித்தார்.
குடியாத்தம்
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்தரை செய்யப்படும் என உதவி கலெக்டர் ெதரிவித்தார்.
குறைதீர்வு கூட்டம்
குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றதது.கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார்.
கூட்டம் தொடங்கியவுடன் கடந்தமாதம் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் விவசாயிகள் பேசியதாவது:-
பழனிவேலன்: வளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கடன் விவசாயிகள் மீது சிலர் போலியாக கடன் பெற்றனர் இது குறித்து வழக்கு நடைபெற்று மோசடிக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனாலும் அந்த 87 விவசாயிகளுக்கு எந்தவித கடன் வசதி கிடைக்கவில்லை.
சேகர்: குடியாத்தம் உழவர்சந்தை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும்
உதயகுமார்: பத்தலபல்லி அணை கட்டும் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாக்கம்மணவாளன்: எங்கள் ஊராட்சியில் வனத்துறையின் சமூககாடுகள் பிரிவில் 5 ஏக்கர் நிலம் உள்ளது அதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்ந நிலத்தை ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,
ராமலிங்கம்: நெல்லூர் பேட்டை ஏரியை திறந்து எங்கள் பகுதி கால்வாயில் ஏரி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்பார்த்தசாரதி: சின்னசேரி, அகரம்சேரி, கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம் ஆகிய ஊராட்சிகள் தொடர்ந்து குடியாத்தம் தாலுகாவில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என உதவி கலெக்டர் ெதரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மேலும் விவசாயிகள் பேசகையில் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் வருவது இல்லை என புகார் தெரிவித்தனர். கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய உதவி கலெக்டர் வெங்கட்ராமன், ''விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முக்கியமான துறைகளின் அதிகாரிகள் வருவதில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும். விவசாயிகள் வைத்த குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும்'' என்றார்.=========