பள்ளி மாணவிகள் பங்கேற்ற சமரச விழிப்புணர்வு பேரணி


பள்ளி மாணவிகள் பங்கேற்ற சமரச விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 12 April 2023 3:24 PM IST (Updated: 12 April 2023 7:13 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற சமரச விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற சமரச விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான ஏ. தாவூத் அம்மாள் தலைமையில் சமரச விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.டி. சதீஷ், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி வக்கீல் சங்க தலைவரும், அரசு வக்கீலுமான கே. ராஜமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமர்வு கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா சமரச விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்து சிறப்பித்து பேசினார். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி ஆரணி கோட்டை மைதானம் 4 புறமும் சென்று மீண்டும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வந்ததும் நிறைவடைந்தது.

பேரணியில் முன்னாள் அரசு வக்கீல் சங்க துணைத் தலைவர் எஸ்.ஸ்ரீதர், வக்கீல்கள் ஏ.சிகாமணி, வாசுதேவன், சந்திரசேகரன், எம்.மூர்த்தி, எஸ்.தனஞ்செழியன், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 4 மணி அளவில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் முன்பாக சமரச விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.


Next Story