சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்


சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

புதுக்கோட்டையில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை ஐகோர்ட்டு சமரச தீர்வு மையம் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 10-ந் தேதி சமரச நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் சமரச வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சமரச தீர்வு மையத்தில் 'சமரச நாள்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால் வரவேற்று பேசினார். கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜெயந்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

துண்டு பிரசுரங்கள்

ஊர்வலம் பழைய பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் சமரச தீர்வு மையம் முன்பு வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது சமரச தீர்வு மையம் தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெமி ரத்னா, முதன்மை சார்பு நீதிபதி சசிக்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பூர்ணிமா, புதுக்கோட்டை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் நன்றி கூறினார்.


Next Story